திருவள்ளூர்:தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் வி.கண்ணதாசன் திருத்தணி கிளைச்சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் கிளைச் சிறையில் உள்ள 14 கைதிகளிடமும் குறைகளைக் கேட்டு அறிந்தார், பின்னர் சிறையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, கிளைச் சிறையில் உள்ள கைதிகளின் பாதுகாப்பு போன்றவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் வி. கண்ணதாசன், “தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பில் மாநிலத்தில் உள்ள மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிளைச் சிறையிலும் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன் அடிப்படையில் தான் திருத்தணியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு, அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகள் வழங்கப்படுகிறதா அல்லது காவல்துறையால் அவர்கள் தாக்கப்படுகிறார்களா? என்றும், அவர்கள் வன்கொடுமை செய்யப்படுகிறார்களா? என்று சிறை கைதிகளிடம் கேட்கப்பட்ட போது அப்படி எதுவும் இந்த சிறையில் நடக்கவில்லை என்று கூறினர்.
மேலும், ’’கிளைச்சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக வழங்கப்படுகிறது. சமீபத்தில் கள்ளச் சாராயத்தால் ஏற்படும் பிரச்னைகளில், திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு அதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர். பின்னர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் சிறையில் அடைக்கப்பட்ட விவரங்களை காவல்துறையினரிடம் கேட்டு அறிந்துள்ளேன்.