தமிழ்நாடு

tamil nadu

திருவள்ளூரிலும் இளவரசி, சுதாகரன் நிலம் அரசுடைமையாக்கம்!

திருவள்ளூர்: மாவட்டத்தில் உள்ள சசிகலாவின் உறவினர்களான வி.என். சுதாகரன், இளவரசி ஆகியோரின் 41.22 ஏக்கர் நிலம் அரசுடைமையாக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

By

Published : Feb 11, 2021, 10:43 AM IST

Published : Feb 11, 2021, 10:43 AM IST

திருவள்ளூரிலும் இளவரசி, சுதாகரன் நிலம் அரசுடமையாக்கம்!
திருவள்ளூரிலும் இளவரசி, சுதாகரன் நிலம் அரசுடமையாக்கம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். சுதாகரன் தொடர்ந்து சிறையில் உள்ளார். இந்த நிலையில், அவர்களது சொத்துகளை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கிவருகிறது.

அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று (பிப். 11) திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகாவிற்குள்பட்ட வேளகாபுரம் கிராமத்தில் உள்ள மெடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், வி.என். சுதாகரன், இளவரசி ஆகியோரது பெயரில் உள்ள 41.22 ஏக்கர் நிலம் ஆகியவற்றை வருவாய்த் துறையினர் கையகப்படுத்தினர். மேலும், இந்த நிலம் அரசுடைமை ஆக்கப்பட்டதாக ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் சசிகலா - அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details