தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் குண்டுகளை வீசும் தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

பெட்ரோல் குண்டுகளை வீச்சு மற்றும் கலவரத்தை தூண்டும் தீய சக்திகளை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என திருமாளவன் வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல் குண்டுகளை வீசும் தீய சக்திகளை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - திருமாளவன் வலியுறுத்தல்
பெட்ரோல் குண்டுகளை வீசும் தீய சக்திகளை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - திருமாளவன் வலியுறுத்தல்

By

Published : Sep 27, 2022, 10:20 AM IST

Updated : Sep 27, 2022, 11:25 AM IST

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் நடைபெற்ற திருமண விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய திருமாளவன், “அக்டோபர் 2 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நல்லிணக்க பேரணியை அறிவித்துள்ளோம். பல்வேறு பணிச்சுமைகள் இருந்தாலும் கருத்தியல் ரீதியாக நாம் அரசியலில் எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

இந்தியாவில் அரசியல் பேரிடர் என்றால், அது பாஜகவும் ஆர்எஸ்எஸ் என்று சொன்னால் மிகை ஆகாது. அவர்கள் வளர வளர நாடு பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பாஜகவும் ஆர்எஸ்எஸ் வலிமை பெற்று வரும்போது, நாடு மிகப்பெரிய பேரிடரை சந்திக்கும்.

அது பொருளாதாரத்திலும் சமூக நீதியிலும் பேரிடரை சந்திக்கும். சங்பரிவார் அமைப்புகளும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளும் நாட்டில் வலுப்பெற சமூகநீதி, ஜனநாயகம் ஆகியவை நசுக்கப்படும் என அம்பேத்கர் கூறியுள்ளார். பாஜக என்பது சாதாரண அரசியல் கட்சி அல்ல. தேர்தல் கட்சியும் அல்ல. அது கோல்வாக்கரின் நச்சு. சித்தாந்தத்தில் உருவான ஒரு கட்சி.

கட்சியினரின் இல்ல விழாவில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு

இந்த தீய சக்திகளின் அரசியல், தேசத்தின் அழிவுக்கு காரணமாக முடியும். அந்த நச்சு அரசியல் தற்போது இந்தியாவில் மத வெறுப்பையும், அரசியல் வெறுப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இன்றைக்கு நான் வரும் வழியில் அண்ணா சிலை காவி துணியால் மூடப்பட்டுள்ளது.

அவரது கையில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஆ.ராசா உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற கீழ்த்தரமான செயல்களை பாஜகவை தவிர வேறு எந்த அரசியல் கட்சியினரும் செய்ய மாட்டார்கள். எங்கெல்லாம் பாஜக ஆட்சி செய்ய காலூன்ற துடிக்கிறதோ, அங்கெல்லாம் இது போன்ற வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும்.

தற்போது ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டை குறி வைத்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு வீசுவது, கலவரத்தை தூண்டுவது போன்ற தீய சக்திகளை தமிழ்நாடு அரசு கண்காணித்து இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அவர்களே தங்களது வீடு, கார் போன்றவற்றிற்கு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, அதை இஸ்லாமிய சமூகத்தின் மீது பழி போட்டு அவர்களை குற்றவாளியாக சித்திரிக்கின்றது.

தற்போது இங்கு நடைபெறுவதெல்லாம் இங்குள்ள பாஜக மாநில தலைவர் செயல்பாட்டால் அல்ல. டெல்லியில் இருந்து அமித்ஷா மூலம் இயக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்க வேண்டும். அதே பேரணியை பாஜக நடத்தினால் அனுமதி தரலாம். ஆனால் ஆர்எஸ்எஸ் பேரணியை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்.

மேலும் தமிழ்நாட்டில் மத சாயத்தை வைத்து அரசியல் செய்து கலவரத்தை தூண்டும் நபர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எச்.ராஜா திடீரென வெளிச்சத்திற்கு வந்து ஊடகங்களின் வாயிலாக திருமாவளவன் தீய சக்தி என கூறுவார். ஆமாம், ஆர்எஸ்எஸ் மற்றும் சங்க பரிவார் அமைப்பு போன்றவர்களுக்கு திருமாவளவன் தீய சக்திதான்.

அதை அவர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஒரு நாளைக்கு 100 முறை எழுதினாலும் சந்தோஷம். சனாதானத்திற்கு எதிராக திருமாவளவன் தீய சக்திதான். ஆனால் பொதுமக்களுக்கு என்றும் சமூக நீதிக் காவலனாக இருப்பேன். இந்து வாரணாசிரமப்படி இந்துக்கள் நாலு வர்ணங்கள் என கூறப்படுகிறது.

பிராமணர்கள், சத்திரியர்கள், வைஷ்ணவர்கள் மற்றும் சூத்திரர்கள் என பாகுபாடு பிரிக்கப்பட்டுள்ளது. அதில் அவர்களை பொறுத்தவரை தலித்துக்கள் இந்துக்கள் அல்ல. ஆகையால் நான் இந்து அல்ல என எச்.ராஜா கூறுவார். அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 100 பேர், நகரத்தில் 100 பேர், பேரூராட்சியில் 100 பேர் என அனைத்து பகுதிகளிலும் மாநிலத்தில் 350 இடங்களில் சமூக நல்லிணக்க பேரணி நடத்த வேண்டும். கையில் சமூக நீதி கொடியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏந்தி பேரணியாகச் செல்ல வேண்டும்" என்றார்.

இந்த விழாவில் எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ், திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மூவ சித்தார்த்தன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக 18 பேர் கைது

Last Updated : Sep 27, 2022, 11:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details