திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 21ஆக உயர்ந்துள்ளது. மின்னல் வேகத்தில் பரவும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் மக்கள் அதிகமாக கூடியதன் விளைவாக கரோனா தொற்று சமூக பரவலாக மாறியது.
இதனைத்தொடர்ந்து, கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை திருமழிசை துணைக் கோள் நகரத்திற்கு மாற்றப்பட்டது. இதனையொட்டி அங்கு வரும் வியாபாரிகள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் முயற்சியில் 'ஐரிஸ்' என்ற கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவி பொது இடங்கள் மற்றும் அத்தியாவசிய கடைகளில் பொதுமக்களிடையே இரண்டரை அடி இடைவெளியை கடைப்பிடிக்க உதவியாக இருக்கிறது.