திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பட்டறைபெரும்புதூர் அருகே உள்ள டிடி மருத்துவமனையில் 3000 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டுவிரைவாக ஆயத்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜூன் 16) கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம், இதுவரை தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் நபர்களின் எண்ணிக்கை 1001ஆக அதிகரித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கி, இதுநாள் வரை பாதிப்புக்குள்ளான 1,945 பேரில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்கள், 914 பேர். வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திருவள்ளூர் மாவட்டத்தில் 30 பேராக உயர்ந்துள்ளது.
எனவே, மாவட்டம் முழுவதும் மக்கள் வெளியே செல்லவும், தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் கடைக்குச் செல்பவர்கள், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்களில் நுழைபவர்கள் ஆகியோரைக் கண்காணிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால், திருவள்ளூர் மாவட்டம், முழுவதும் எல்லைகளில் காவல் துறை தீவிர விசாரணை செய்த பின்னர், தகுந்த அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதையும் படிங்க:சுகப் பிரசவத்தில் கரோனா பரவுதல் குறைவு - லண்டன் ஆய்வில் தகவல்!