திருவள்ளூர் :திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக சுமதி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஆவடி மோரை கிராமத்தில் உள்ள ஒருவரின் நிலத்தை போலியாக ஆவணம் தயாரித்து திருவள்ளூர் சார்பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் போலியான ஆவணங்கள் கொண்டு அதிக அளவில் பத்திரப்பதிவு திருமணங்கள் செய்து வைத்தது தொடர்பாக அவர் மீது பல குற்றசாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக பத்திரப்பதிவு ஐஜியிடம் புகார் அளிக்கப்பட்டது.