திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் லஷ்மிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன். இவர், 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
விடுமுறை நாட்கள் என்பதால் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது முரளிதரன் கிணற்று நீரில் மூழ்கியதால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், மீட்க முயன்றனர். ஆனால், அவர்களால் மீட்க முடியாததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றிலிருந்த முரளிதரனை சடலமாக மீட்டனர்.