திருவள்ளூர்மெய்யூர் பகுதியில் அரசுப் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி சாகசம் மேற்கொண்ட பள்ளி மாணவர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது தொடர்ந்து.
அத்தகைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது பெரியபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (டிச.7) அவர்களின் பெற்றோரை வரவைத்து காவல்துறையினர் அறிவுரை கூறி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர், மாணவி ஓடும் ரயிலில் ஆபத்தை உணராமல் சாகசம் மேற்கொண்ட வீடியோ வைரலாகி அந்த நிலையில் அந்த மாணவர்கள் பெற்றோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையில் மேலும் இத்தகைய செயலில் மாணவர்கள் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஓடும் பேருந்தில் படிக்கட்டில்
இந்த, எச்சரிக்கையை மீறியும் திருவள்ளூர் மாவட்டத்தில் மெய்யூர் மற்றும் பொன்னேரி பகுதியில் பள்ளி மாணவர்கள் ஓடும் பேருந்தில் படிக்கட்டில் நின்றவாறு மேற்கூரையில் தொங்கியவாறு சாகசம் செய்யும் வீடியோ கடந்த சில நாள்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன. அத்தகைய மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து எச்சரிக்கை செய்தும் அறிவுரை கூறியும் அனுப்பிவைத்தனர்.