டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், மழைக்காலங்களில் மழை நீர் தங்குதடையின்றி செல்லவும் பூவிருந்தவல்லி நகராட்சி சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக வாரம் ஒரு நாள் ஒரு வட்டத்தில், தீவிரத் துப்புரவு முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த நேரத்தில் நேற்று பூவிருந்தவல்லி நகராட்சிக்குட்பட்ட ஆறாவது வட்டத்தில் தீவிர துப்புரவு முகாம் நடைபெற்றது. இதில் 21 வார்டுகளில் பல்வேறு பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளைச் சரி செய்து குப்பைகளை அகற்றுதல், தேங்கியுள்ள மழை நீரை அகற்றி பிளீச்சிங் பொடி இடுதல், மருத்துவ முகாம் மற்றும் நில வேம்பு குடிநீர் உள்ளிட்டவை வழங்குதல் போன்றவை செயல்படுத்தப்பட்டது.