திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு ஸ்ரீராம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆவடி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு இயந்திரம் பாதுகாப்பு அறையில் (Strong room) மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் வைஃபை கருவி கொண்டு சென்றதால் திமுகவினர் எதிர்ப்பு! - Tiruvallur
திருவள்ளூரில் வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று (ஏப். 28) தேர்தல் நடத்தும் அலுவலர் வைஃபை கருவி கொண்டுசென்றதால் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருவள்ளூர்
எந்தவித மின்னணு கருவிகள் அங்கு எடுத்துச் செல்லக்கூடாது என்று தேர்தல் விதிமுறைகள் உள்ளதால், இன்று (ஏப். 28) வாக்கு இயந்திரம் வைத்துள்ள அறைக்கு, தேர்தல் நடத்தும் அலுவலருடன் வைஃபை கருவியை தேர்தல் விதிமீறல்கள் மீறி எடுத்துச் சென்றதாக திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.