திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் காவல் துறையினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
கரோனா நேரத்தில் அயராது உழைக்கும் காவலருக்கு விருது வழங்கல்! - திருவள்ளூர் காவல்துறையினர்
திருவள்ளூர்: கரோனா காலகட்டத்தில் உயிரை துச்சமாக நினைத்து சேவை மனப்பான்மையுடன் மக்கள் பணியாற்றிவரும் காவல்துறையினரை கௌரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
police
இதனால் சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினருடன் இணைந்து பணியாற்றி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களை கௌரவிக்கும் விதமாக கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் விருதுகள் வழங்கப்பட்டன.
பின்னர் யோகா கலைமாமணி ராதாகிருஷ்ணன், காவல்துறையினருக்கு உணவு முறைகள், மன அழுத்தத்தைக் குறைக்கும் சில பயிற்சிகளை பயிற்றுவித்தார்.