பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த போகி பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பழைய ஆடைகள், பழைய பாய்கள், தேவையில்லாத பொருட்கள் ஆகியவற்றை பொது மக்கள் எரித்து போகியைக் கொண்டாடினர்.