தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் தினக்கூலிகள், சாலை ஓரங்களில் வசிக்கும் ஆதரவற்ற ஏழைகள் பசியால் வாடும் சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனை அறிந்த திருவள்ளூர் பெரும்பாக்கம் இளைஞர்கள் பலர் ஒன்று திரண்டு தங்களின் சேமிப்பில், திருவள்ளூர் முன்னாள் நகரமன்ற தலைவர் பொன்பாண்டியன் ஏற்பாட்டில் ஏழைகளுக்கு உணவளிக்க முடிவு செய்தனர். இதற்காக நடந்த நிகழ்ச்சியில் பெரும்பாக்கம் பெருமாள் கோவிலில் 400க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.