திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில், கிராம ஊராட்சிகளுக்கு 2020-21ஆம் ஆண்டு நிதிக் குழுவின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணித்தேர்வு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏற்கனவே ஒப்பந்தப் புள்ளிகள் பெறுவதற்கான நடைமுறைகள் ஊராட்சிகளிடமிருந்தது போல் மீண்டும் அதே முறையை பின்பற்றக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆட்சியரிடம் மனு !
திருவள்ளூர்: ஊராட்சிகளே ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் முறையை அமல்படுத்தக் கோரி ஆட்சியரிடம் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
petition
15ஆம் நிதிக்குழு மானியம், ஜல்ஜீவன் மிஷன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகியவை மூலம் ஒதுக்கப்படும் நிதிக்கும் பணிகள் தேர்வு செய்ய வேண்டும், ஒப்பந்தப் புள்ளிகள் கோரவும் ஊராட்சிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.