திருவள்ளூர்: விடையூர் - கலியனூர் இணைக்கும் வகையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட வரும் மேம்பாலம் முழுமை பெறாமல் உள்ளது. கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஆபத்தான வகையில் பள்ளிக்கு சென்று வருவதை ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், கடம்பத்தூர் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
கொசஸ்தலை ஆற்றில் எம்எல்ஏ ஆய்வு நெமிலி அகரம் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி தாமோதரன், துணைத்தலைவர் நாகரத்தினம், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் மேம்பாலப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடம்பத்தூர் காவல் ஆய்வாளர் கமலஹாசன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். தற்காலிகமாக பாலத்தை இணைக்கும் வகையில் மணல் கொட்டி சமன்படுத்தும் வேலை நடந்து வருகிறது. மேம்பால பணி முடியும் வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அம்மபள்ளி அணையில் இருந்து 170 கனஅடி நீர் திறப்பு; கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு