தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் ரூ.182 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திறப்பு - 40 பயிற்சி மருத்துவர்கள் பணியில்

திருவள்ளூரில் ரூ.182 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

Etv Bharatதிருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா - அமைச்சர்கள் பங்கேற்பு

By

Published : Oct 22, 2022, 9:09 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,000 படுக்கை வசதிகளுடன், அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க கூடிய வகையில் ரூ.182 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று(அக்-21) மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.385 கோடி 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி கட்டி முடிக்கப்பட்டு கடந்தாண்டு செயல்படத் தொடங்கியது.

இந்த நிலையில் ஏற்கனவே இருந்த பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தை அகற்றிவிட்டு 5 ஏக்கர் பரப்பளவில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடங்கள் 165 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடியிருப்பு மற்றும் விடுதி கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தன. இதற்கென கூடுதலாக 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளது.

அமைச்சர்கள் பங்கேற்பு

மருத்துவமனையில் ஆறு அடுக்கு மாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு முதல் தளத்தில் பொது மருத்துவம் சார்ந்த சிகிச்சை அளிக்கப்படும் வகையிலும், அதற்கான உபகரணங்களும் உள்ளன.இரண்டாவது தளத்தில் அனைத்து விதமான உயர் அறுவை சிகிச்சை வார்டுகள். 2 ஐசியு வார்டுகளும் உள்ளன. மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தில் எலும்பு நோய்க்கான சிகிச்சை அளிக்க தேவையான உபகரணங்கள். ஐந்தாவது தளத்தில் 8 ஆபரேஷன் தியேட்டர் மற்றும் 6 ஐசியூ வார்டுகளும் ஆறாவது தளத்தில் கூட்ட அரங்கம் மற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பயிற்சி அறையும், மருத்துவமனையில் ஆறு இடங்களில் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா - அமைச்சர்கள் பங்கேற்பு

கூடுதல் படுக்கை வசதிகள்:பழைய அரசு மருத்துவமனையில் 500 படுக்கையில் வசதியுடன் செயல்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மொத்தம் 1,000 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க 170 மருத்துவர்களும் 250 செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் இருதய நோய் நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்காத நிலையில், தற்போது இதற்கு சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் 40 பயிற்சி மருத்துவர்கள் பணியில் இருப்பதாகவும் மருத்துவமனையில் வெளிநாட்டில் படித்து முடித்து தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்படும் தேர்வில் வெற்றி பெறும் பயிற்சி மருத்துவர்கள் மேலும் கூடுதலாக 107 பேரை நியமிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கற்றலை ஊக்குவிக்கும் காலை உணவு.. களத்தில் நிகழ்த்தும் மாற்றம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details