தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 16, 2020, 3:50 PM IST

ETV Bharat / state

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருவள்ளூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

திருவள்ளூர்:மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் சார்பில் இன்று (டிசம்பர் 16) திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாகப் போராட்டம் நடைபெற்றது.

அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநில விவசாயிகள் அணி செயலாளர் துளசிராமன் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், டிஎஸ்பி துரை பாண்டியன், விவசாயிகள் சிலர் காயமுற்றனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட அனைவரையும் இழுத்துச் சென்று காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். தற்போது அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு சில மணி நேரம் பதற்றம் நிலவியது.

இதையும் படிங்க:விவசாயிகளை தவறான வழியில் கொண்டுச் செல்ல எதிர்க்கட்சிகள் சதி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details