தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு: திருவள்ளூர் மாணவி முதலிடம் - தமிழ்நாடு

திருவள்ளூர்: நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் பொன்னேரி பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் மாணவி கே.சுருதி முதலிடம் பிடித்துள்ளார்.

திருவள்ளூர் மாணவி

By

Published : Jun 6, 2019, 12:55 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகேயன் என்பவரது மகள் சுருதி. இவர் பஞ்செட்டியில் இருக்கும் வேலம்மாள் போதி உறைவிடப் பள்ளியில் படித்தவர். இந்நிலையில், நேற்று வெளியான மருத்துவ கல்விக்கான நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 685 மதிப்பெண்கள் எடுத்து தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், இந்திய அளவில் 57ஆவது இடத்தையும் அவர் பெற்றுள்ளார்.

தேர்வில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் மாணவி சுருதி தனது பள்ளி தோழிகளுக்கு இனிப்பு வழங்கி தனது ஆசிரியர்களுடனும், பெற்றோருடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த மாணவி சுருதி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ’தனது வெற்றிக்கு கடின உழைப்பும், ஆசிரியர்களும், பெற்றோரும் காரணமாக இருந்ததாகக் கூறினார். மேலும், கடந்த இரண்டு வருடங்களாக நீட் தேர்வில் மட்டுமே கவனம் செலுத்தியதாகவும், வேறு எதிலும் கவனத்தைச் சிதறவிடாமல் படித்ததால்தான் இது சாத்தியமானது’ எனவும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details