திருவள்ளூர்: தமிழ்நாட்டில் குறைந்திருந்த கரோனா பெருந்தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்காக திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று ஆய்வு செய்தார்.
கரோனா தடு்பபூசி செலுத்துவதில் சிறந்த மாவட்டமாக திருவள்ளூர் திகழ்வதாகவும் முதல் தவணை தடுப்பூசியை 95 சதவிதம் பேரும் 2- வது தவணை தடுப்பூசியை 80 சதவிதம் பேர் வரை செலுத்தியுள்ளனர். தற்போது மீண்டும் தொற்று பரவி வருவதால் முன்னெச்சரிக்கை அவசியமாகின்றது. ஆகையால் மூன்றாவது தடுப்பூசியை மக்கள் அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆறு மாதங்களாக மக்களிடையே முக கவசம் அணியும் பழக்கம் குறைந்து வருகிறது. வாரத்திற்கு 20 நபர்களுக்கு பரவிய தொற்று தற்போது நாளொன்றுக்கு 50 பேர் வரை பரவி வருகிறது. அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். மேலும் ஏற்கனவே கடைபிடித்த விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றார்.