தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூர் நீர்நிலைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர்: திருநின்றவூர் பேரூராட்சி, ஆவடி, பருத்திப்பட்டு ஏரி ஆகிய இடங்களில் உள்ள நீர்நிலைகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று (நவ.18) காலை ஆய்வு மேற்கொண்டார்.

By

Published : Nov 18, 2020, 12:51 PM IST

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்யும் வடகிழக்கு பருவமழையால் திருவள்ளூர் மாவட்டத்தின் சில இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் திருநின்றவூர் பேரூராட்சி, ஆவடி, பருத்திப்பட்டு ஏரி ஆகிய இடங்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏரிகளின் நிலை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து வரத்துக் கால்வாய் அமைத்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கலந்தாலோசித்தார்.

மழை வெள்ளம் அதிகரிக்கும் இந்த நேரத்தில் அலுவலர்கள் மெத்தனமாக இருக்காமல் விரைவில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். வெள்ளம் ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க இடங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித் துறை, செயற்பொறியாளர், செயல் அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:முல்லை பெரியாறில் புதிய அணை தொடர்பான ஆய்வுகளை நிறுத்து! எச்சரிக்கும் விவசாயிகள்

ABOUT THE AUTHOR

...view details