தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அனுமதி மறுத்த விவகாரம்: 3 பேர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை! - Tiruvallur Dalit panchayat president

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர், தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அனுமதிக்காதது குறித்த விவகாரத்தில் மூன்று பேரின் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்துப்பக்கம் ஊராட்சி மன்ற தலைவரை மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து கவுரவித்தார்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்துப்பக்கம் ஊராட்சி மன்ற தலைவரை மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து கவுரவித்தார்

By

Published : Aug 20, 2020, 11:25 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள அத்திப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் என்பவர், மாவட்ட மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு மனு ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், கடந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், என்னுடைய பெயரை இதுவரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எழுதவில்லை என்றும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களில் தேசியக்கொடி ஏற்ற தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, தன்னுடைய அலுவலகம் வரவழைத்து அவருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினருக்கு மறுக்கப்பட்ட உரிமை குறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிவில், இந்தச் சம்பவம் நடைபெற காரணமான ஊராட்சி மன்றச் செயலாளர் சசிக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்கு உறுதுணையாக இருந்த இரண்டு பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்தார்.

மேலும், இது போன்று இனி நடைபெறாத வண்ணம் கண்காணிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க..திருவள்ளூரில் ஊராட்சி தலைவர் கொடியேற்ற அனுமதி மறுப்பு: செய்தியாளர் மீது தாக்குதல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details