திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் தினேஷ் (வயது 26). இவர் ஜே.சி.பி இயந்திரம் வைத்து தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் வேலையின் காரணமாக கடந்த மாதம் தினேஷ்மலேசியாவிற்கு சென்றார். அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் 28ஆம் தேதியன்று தனது சொந்த ஊரான மணவூருக்கு வந்தார்.
கடந்த இரண்டு நாள்களாக தினேஷுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல் சோர்ந்து காணப்பட்டார். இதற்காக அவர் நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அப்போது அவர் மருத்துவரிடம் தான் மலேசியாவிற்கு சென்றதாகவும் அப்போது தனக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.