திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆரணி கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
ஆரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - Palaverkadu
திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பதால் ஆரணி கரையோர பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
![ஆரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை flood danger announcement](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11:01:41:1606973501-tn-trl-01-collector-vis-scr-7204867-03122020105654-0312f-1606973214-685.jpg)
Tiruvallur collector
பிச்சாட்டூர் ஏரியிலிருந்து மூன்றாயிரம் அடி தண்ணீர் இன்று (டிச. 03) காலை 11.00 மணிக்குத் திறக்கப்பட உள்ளது, இந்தத் தண்ணீரானது பிற்பகல் 2 மணி அளவில் தமிழ்நாடு எல்லைப்பகுதியான சுருட்டப்பள்ளி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரானது ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பழவேற்காடு சென்றடையும். எனவே திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கரையோர மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.