தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொசஸ்தலை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - Tiruvallur flood awarness

கொசஸ்தலை ஆறு, திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு வட்டங்களைச் சேர்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொசஸ்தலை
கொசஸ்தலை

By

Published : Oct 16, 2020, 1:17 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 9.30. மணி முதல் காலை 4.00 மணி வரை ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டு, அதன்பிறகு அங்கு தொடர் மழையின் இருப்பின், இந்த தண்ணீர் அளவை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் நள்ளிரவில் பள்ளிபட்டு பாலத்தை கடக்கும். நல்லாட்டூர் அணை வரை வரும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், கொசஸ்தலை ஆறு, திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கொசஸ்தலை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேலும் இத்தகவல் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தொடரும் கன மழை காரணமாக நிரம்பிய ஏரி - மகிழ்ச்சியில் விவசாயிகள்

ABOUT THE AUTHOR

...view details