தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு - திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பொது சுகாதாரத்துறை சார்பாக நடைபெற்றுவரும் கொரோனோ வைரஸ் தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார்.

tiruvallur-collector
tiruvallur-collector

By

Published : Mar 17, 2020, 9:52 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள், பரிசோதனை முகாம்கள் அமைத்தல் உள்ளிட்டப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுவருகிறது. அதன்படி, மாவட்ட ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதிகளான பள்ளிபட்டு, திருவாலங்காடு, எல்லாபுரம் பூண்டி, கும்மிடிபூண்டி உள்ளிட்டப் பகுதிகளில் 14 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை அந்த முகாம்களில் 101 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதையும் படிங்க:கரோனா பயத்தால் வயதான தம்பதியை வீட்டில் பூட்டிய அக்கம்பக்கத்தினர்

ABOUT THE AUTHOR

...view details