திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மோரை பகுதியைச் சேர்ந்தவர் வீரராகவன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு உதவியாக பத்மநாபன் என்பவர் பணிபுரிந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பணம் தேவை என ரியல் எஸ்டேட் அதிபர் வீரராகவனிடம், உதவியாளர் பத்மநாபன் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால், வீரராகவன் பணத்தைத் தர மறுத்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து பணம் தருமாறு வீட்டுக்குச் சென்று பத்மநாபன் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் 2014ஆம் ஆண்டு, நவம்பர் 16ஆம் தேதி மாலை ஆவடி டேங்க் தொழிற்சாலை அருகே வீரராகவன் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அவருடன் நண்பர் மாரி என்பவரும் சென்றிருந்த நிலையில் அப்போது, இரு சக்கர வாகனத்தில் பட்டாக்கத்தியுடன் பின்னால் வந்த, பத்மநாபன் வீரராகவனை சரமாரியாக வெட்டியுள்ளார்.