தமிழ்நாடு

tamil nadu

சுமார் 8 லட்சம் புத்தகங்கள் விற்பனை - திருவள்ளூர் புத்தகக்கண்காட்சி ஓர் சிறப்பு கண்ணோட்டம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தகத்திருவிழா முடிவடைந்த நிலையில், அதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரத்யேகப்பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

By

Published : Apr 13, 2022, 3:25 PM IST

Published : Apr 13, 2022, 3:25 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா பற்றி சிறப்பு கண்ணோட்டம்!
திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா பற்றி சிறப்பு கண்ணோட்டம்!

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மாபெரும் புத்தகத்திருவிழா நடந்துமுடிந்துள்ளது. புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் வாசிப்புத்திறனை மேம்படுத்த காந்தியடிகள் பற்றியும்; விஞ்ஞானிகள் பற்றியும்; கவிதைகள் பற்றியும்; ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுகளுக்கு எப்படிப் படிக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கும் வகையிலான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர், குழந்தைகள், இளைஞர்கள் என சுமார் இதுவரை 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருகைபுரிந்து சுமார் 1.30 கோடி மதிப்புள்ள சுமார் 8 லட்சம் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

இதுதொடர்பாக இறுதிநாள் புத்தகக்கண்காட்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், 'திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் மாவட்டம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் முடிவுற்றநிலையில், அதைக்கொண்டாடும் விதமாக திருவள்ளூர் மாநகரில் மாபெரும் புத்தகக்கண்காட்சி தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் நடைபெற்றது.

மேலும் புத்தகக்கண்காட்சியைக் காண, கிட்டத்தட்ட 25 ஆயிரம் மாணவர்கள் நேரடியாக வந்து புத்தகங்களைப் படித்தும் வாங்கியும் சென்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த புத்தகக் கண்காட்சியில் 130 கோடி அளவில் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. தொடர்ந்து இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சி கண்டிப்பாக வைக்கப்படும்' என்றும் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா பற்றி சிறப்பு கண்ணோட்டம்!

தொடர்ந்து கிராமங்களில் உள்ள நூலகங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, புதிய புதிய புத்தகங்கள் வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். பத்துநாள் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில் கலைநிகழ்ச்சிகள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிஞர்களைக்கொண்டு விளக்க உரைகள், மாணவர்கள் படிப்புத்திறனை மேம்படுத்த பல வகைகளில் இந்தப் புத்தகங்கள் உதவுகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். புத்தகக் கண்காட்சி முடிவுற்ற நிலையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா பற்றி சிறப்பு கண்ணோட்டம்!

இதையும் படிங்க:45வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details