தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் பைக் விபத்து: கல்லூரி மாணவர் உள்பட இருவர் பலி! - கல்லூரி மாணவர் உட்பட இருவர் பலி

திருவள்ளூரில் இருசக்கர வாகன விபத்தில் முதலாமாண்டு கல்லூரி மாணவர் உள்பட இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருவள்ளூரில் இருசக்கர வாகன விபத்து - கல்லூரி மாணவர் உட்பட இருவர் பலி!
திருவள்ளூரில் இருசக்கர வாகன விபத்து - கல்லூரி மாணவர் உட்பட இருவர் பலி!

By

Published : Feb 10, 2022, 2:18 PM IST

திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே இருசக்கர வாகன கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் செங்குன்றம் சாலை ஈக்காடு மக்கா நகர் அருகில் நேற்று(பிப்ரவரி 9) இரவு சுமார் 11 மணியளவில் திருவள்ளூர் அடுத்த தனியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் திருவள்ளூர் செக்கடி தெரு ரபுதின் மகன் தமிம்அன்சாரி (18), திருவள்ளூர் பஜார் வீதி பூக்கடையில் வேலை செய்துவந்த காக்களூர் புறவழிச் சாலை கம்பர் தெருவைச் சேர்ந்த நவீன் வயது 22 ஆகிய இரண்டு இளைஞர்களும் அப்பகுதி வழியே சென்றனர்.

நேற்று இரவு சுமார் 11 மணிக்கு அவர்கள் தங்களது ஆர்.15 இருசக்கர வாகனத்தில் வந்தபோது செங்குன்றத்திலிருந்து திருவள்ளூர் நோக்கிவந்த கன்டெய்னர் லாரி மோதியதில் இருவரும் லாரியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த புல்லரம்பாக்கம் காவல் நிலைய காவல் துறையினர் அமரர் ஊர்தி மூலம் இளைஞர்களின் உடலை திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரியை ஓட்டிவந்த ஓட்டுநரைத் தேடிவருகின்றனர். விபத்தில் 18 வயது முதலாம் ஆண்டு கல்லூரி மாணவரும் 22 வயதேயான தந்தையை இழந்த இளைஞரும் விபத்தில் உயிர் இழந்ததால் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க:சைக்கிள் திருட்டால் வேதனையில் சிறுவன்: விரைந்து கண்டுபிடித்த துணை ஆணையர்!

ABOUT THE AUTHOR

...view details