திருத்தணி நகராட்சி ஒன்பதாவது வார்டு ஜோதி நகர் பகுதியில் தனியார் அலைபேசி கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது பணிகளைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மேட்டு தெரு அரசு மருத்துவமனை நுழைவாயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களிடம் சமரசம் பேசினார்.
செல்போன் கோபுரம் அமைக்கத் தடை - பொதுமக்கள் சாலை மறியல் - undefined
திருவள்ளூர்: திருத்தணி செல்போன் கோபுரம் அமைப்பதை கண்டித்து அரசு மருத்துவமனை நுழைவாயில் எதிரே பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மக்கள் அரசு மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் உள்ள இடங்களில் அலைப்பேசி கோபுரம்100 மீட்டருக்குள் உள்ளதால் அதை அனுமதிக்கக் கூடாது .100 மீட்டருக்கு அப்பால்தான் அலைப்பேசி கோபுரம் அமைக்க வேண்டும் என அரசாணை உள்ளது. அரசாணையை மீறி அலைப்பேசி கோபுரம் அமைப்பதால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.அலைப்பேசி கோபுர பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். தொடர்ந்து அலைப்பேசி கோபுரம் அமையவுள்ளபகுதிக்குச் சென்று காவல்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதைத் தொடர்ந்து மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.