தமிழ்நாடு

tamil nadu

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1 கோடியை எட்டியது

By

Published : Dec 10, 2021, 8:49 PM IST

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் 1 கோடியே 2 லட்சத்து 73 ஆயிரம்  ரூபாய் 40 நாட்களில் கிடைத்தது.

திருத்தணி முருகன் கோயில்
திருத்தணி முருகன் கோயில்

திருவள்ளூர்:திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருத்தலமாகும்.

இந்தத் திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாக கிருத்திகை, செவ்வாய்க் கிழமை இரண்டும் முருகப்பெருமானுக்கு உகந்த நாள்கள் என்பதால் பக்தர்கள் எண்ணிக்கை இருமடங்காகும். அப்போது நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

திருத்தணி முருகன் கோயில்

இந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்களை அனுமதித்துவருகிறது. இதனிடையே நேற்று முதல் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

அப்படி 40 நாள்களில் மட்டும் 1 கோடியே 02 லட்சத்து 73 ஆயிரத்து 687 ரூபாய் பணமும், 810 கிராம் தங்கமும், வெள்ளி 9,175 கிராமும் உண்டியல் காணிக்கையாகக் கிடைக்கப்பெற்றதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை மற்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை - ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details