திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ளது அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிக்கின்றனர். பிரதி மாதம் ஒரு முறை கோயில் ஊழியர்கள் மூலம் உண்டியல் திறந்து எண்ணப்பட்டு வருகிறது.
கரோனா தாக்கத்தால் தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி அனைத்துக் கோயில்களும் மூடப்பட்டிருந்தன. ஊரடங்குத் தளர்வுகளுக்குப் பிறகு ஒரு சில தளர்வுகளுடன் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் கோயில் திறக்கப்பட்டது.