திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் மேயர் சிட்டிபாபு தெருவைச் சேர்ந்தவர் பிரபு. தனியார் நிறுவன ஊழியரான இவரது மூன்று வயது மகன் தர்ஷனுக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது.
இதை தொடர்ந்து பிரபு அதேபகுதியில் இருந்த தனியார் மருத்துவமனையில் மகனுக்கு சிகிச்சைப் பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமானது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்தும், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.