தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிமாநில மதுபாட்டில்களைக் கடத்திவந்த மூவர் கைது - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர்: வெளிமாநில மதுபாட்டில்களைக் கடத்திவந்த மூவரை ரயில்வே காவல் துறையினர் கைதுசெய்து, மேலும் எட்டு குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

three-person-arrested-for-smuggling-liquor-in-thiruvallur
three-person-arrested-for-smuggling-liquor-in-thiruvallur

By

Published : Jun 1, 2021, 12:58 PM IST

ஆந்திர மாநிலத்திலிருந்து சப்தகிரி விரைவு ரயில் மூலம் திருப்பதியிலிருந்து வந்த பயணிகளை திருவள்ளூர் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கிரி, பாண்டியன், தலைமைக் காவலர் அய்யப்பன் சோதனை செய்தனர்.

அப்போது, பெரியகுப்பம் கர்க்குழாய் தெருவில் வசிக்கும் வெங்கடேசன் என்பவரை காவல் துறையினர் சோதனைசெய்தனர். இதில் மது விற்பனைசெய்ய கள்ளத்தனமாக ஆந்திராவிலிருந்து 28 மதுபாட்டில்களைக் கடத்திவந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 28 மதுபாட்டில்களையும் கைப்பற்றிய ரயில்வே காவல் துறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்து வெங்கடேசன் மீது வழக்குப்பதிவுசெய்தனர்.

இது குறித்து, காவல் துறையினர் கூறும்போது, இதுபோன்று கடந்த மூன்று நாள்களாக ரயில்வே காவல் துறையினரால் அண்டை மாநிலங்களிலிருந்து கடத்திவரப்பட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களைப் பறிமுதல்செய்து, மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எட்டு நபர்களை தனிப்படை காவல் துறையினர் தேடிவருவதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ரயில் மூலம் மதுபானங்கள் கடத்தல் - 42 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details