தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாயை வெட்டி கொலை செய்த மூவர் கைது.. திருவள்ளூரில் நடந்தது என்ன? - crime

திருவள்ளூரில் முன்விரோதம் காரணமாக புவனேஸ்வர் என்ற இளைஞரின் நாயை கத்தியால் வெட்டி கொலை செய்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

tiruvallur
நாயை கத்தியால் வெட்டி கொலை செய்த 3 பேர் கைது

By

Published : Jun 2, 2023, 2:11 PM IST

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு அன்பழகன் நகரை சேர்ந்தவர் புவனேஸ்வர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது நண்பர்களுடன் அத்திப்பட்டில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மது அருந்தி கொண்டிருக்கின்ற போது தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த தகராறில் அத்திப்பட்டு காந்தி தெருவைச் சேர்ந்த சேர்ந்த சங்கர், வ.உ.சி நகரை சேர்ந்த பிரபாகரன், அத்திப்பட்டு கலைஞர் நகரை சேர்ந்த ரோகித் ஆகியோர் தாக்கியதில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்று வருகிறார்‌‌. இந்த நிலையில் நேற்று முன்தினம் சங்கர், பிரபாகரன், ரோகித் ஆகியோர் புவனேஸ்வர் வீட்டிற்கு சென்று பயங்கர ஆயுதங்களுடன் சத்தம் போட்டு வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: பால் பண்ணை உரிமையாளரை மிரட்டிய பாஜக, விசிக நிர்வாகிகள் மீது வழக்கு!

அப்போது அவரது வீட்டில் இருந்த நாய் ஒன்று அவர்களை பார்த்து குரைத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மூவரும் நாயை கத்தியால் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். நாயின் மரண ஓலத்தை கேட்டு புவனேஸ்வர் வீட்டிலிருந்தவர்கள் சத்தம் போடவே அருகாமையில் உள்ளவர்கள் கூடியதால் அங்கிருந்து மூவரும் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் புவனேஸ்வர் குடும்பத்தினர் நாயின் உடல் அருகே அமர்ந்து கண்ணீர் விட்டனர்.

அதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் புவனேஸ்வரர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் மீஞ்சூர் காவல்துறையினர் சங்கர், பிரபாகரன், ரோகித் ஆகிய மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: துபாய், கோலாலம்பூரில் இருந்து தங்கம் கடத்தல்.. திருச்சியில் குருவி கைது.. சுங்கத்துறை விசாரணை!

முன்விரோத பிரச்சனையில் சிறிதும் ஈவுஇரக்கமின்றி வாயில்லா ஜீவனான நாயை கொலை செய்த இளைஞர்களின் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருவதோடு இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்தப்போவது எப்படி? - அமெரிக்காவில் வியூகத்தை உடைத்த ராகுல்காந்தி!

ABOUT THE AUTHOR

...view details