திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையிலிருந்த இரண்டு இளைஞர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்ததால் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சோதனை நடத்தியதில், 15 கஞ்சா பொட்டலங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
கஞ்சா விற்ற பெண் உட்பட மூன்று பேர் கைது! - 1.1 / 2 kg of cannabis seized at thiruvallur
திருவள்ளூர்: செங்குன்றத்தில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட மூன்று நபர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாதவரத்தில் ரம்யா என்பவர் தங்களுக்குக் கஞ்சா விநியோகம் செய்ததாகத் தெரிவித்தனர். இதனையடுத்து ரம்யாவின் வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் நடத்திய சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றறை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செங்குன்றம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்போது அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 65 வயது முதியவர் சந்தேக மரணம்: போலீஸ் விசாரணை!