சென்னை, பொன்மலைப் பகுதியைச் சேர்ந்த நியூ இந்தியா காப்பீடு நிறுவன முகவராக பணிபுரிபவர் சந்திரசேகர். இவர் மனைவி புஷ்பா, மகன்கள் கிருஷ்ணா, கைலாஷ் குடும்பத்தினருடன் திருப்பதி சாமி தரிசனம் முடித்துவிட்டு சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கண்டெய்னர் லாரி காரில் மோதி விபத்துக்குள்ளானது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் பலி - family
திருவள்ளூர்: திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் பலி
இதில் சந்திரசேகர், மனைவி புஷ்பா, மகன் கிருஷ்ணா மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் உடன் பயணித்த மூத்த மகன் கைலாஷ் உயிர் தப்பினார்.
இதையடுத்து, திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் விபத்தில் இறந்தவர்களின் உடலைமீட்டு உடற்கூறாய்வுக்காகதிருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.