திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்காலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது உருக்கிய இரும்பு குழம்பு சிதறியதில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் பணியாற்றிய சுதான் தாகூர், பிங்கர்சாத்சா, வாஸ் அகமது ஆகிய மூவர் காயமடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இரும்ப குழம்பு சிதறியதில் மூவர் காயம் - தகுந்த உபகரணங்கள் இன்றி பணி
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்காலையில் இரும்பு குழம்பு சிதறியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
![கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இரும்ப குழம்பு சிதறியதில் மூவர் காயம் Three injured in iron ore spill at Gummidipoondi sipcot](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-vlcsnap-2020-08-19-19h30m16s941-1908newsroom-1597845652-365.jpg)
Three injured in iron ore spill at Gummidipoondi sipcot
காயமடைந்த மூவரும் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தகுந்த உபகரணங்கள் இன்றி பணியமர்த்திய தொழிற்சாலை மேற்பார்வையாளர் மற்றும் பர்னல் மேற்பார்வையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.