தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து கொளையர்கள் கைவரிசை! - three houses jewel theft in nandiyampakkam

திருவள்ளூர்: அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

theft in thiruvallur
theft in thiruvallur

By

Published : Nov 26, 2019, 11:43 PM IST

திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள அண்ணாநகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயவேல், ராஜேஷ், முகுந்தன் ஆகிய மூன்று பேர். ஜெயவேல் மின்வாரிய ஒப்பந்த ஊழியராகவும், மற்ற இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், மூவர் வீட்டிலும் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருந்த நிலையில், இன்று வீட்டிற்கு திரும்பி வந்த மூவரும் வீட்டுனுள் சென்றபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ உடைந்திருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பீரோவினுள் பார்த்தபோது 8 சவரன் நகை, 12,000 ரூபாய் ரொக்கம், 1/4 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

கொள்ளையடிக்கப்பட்ட வீடு

மூவரின் வீட்டில் கொள்ளையடித்த பொருட்களின் மதிப்பு மூன்று லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இதுகுறித்து, மூவரும் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், நகை, பணம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

நூதன முறையில் ரூ.70 லட்சத்துக்கு மேல் மோசடி... முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details