திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காந்திநகரில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட கஞ்சாவை கடத்திவந்தது தெரியவந்தது.
இரண்டு கிலோ கஞ்சா கடத்தல்: மூன்று பேர் கைது - Trafficking in two wheelers
திருவள்ளூர்: சோழவரம் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து மூவரை கைதுசெய்தனர்.
கைதானவர்கள்
இதனையடுத்து அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டன், சதீஷ்குமார், பொன்ராஜ் ஆகிய மூவரை கைதுசெய்தனர். மேலும் தப்பியோடிய இருவர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:பொள்ளாச்சி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 586 கிலோ பான் மசாலா பறிமுதல்!