தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை விளையாட்டு மைதானமாக மாற்ற எதிர்ப்பு! - tiruvallur news

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை விளையாட்டு மைதானமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

protest
protest

By

Published : Aug 11, 2020, 6:37 AM IST

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை விளையாட்டு மைதானமாக மாற்றும் பணிகளை ஊராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.

இதற்காக ட்ராக்டர் மற்றும் வாகனங்களில் வந்த ஊராட்சி பணியாளர்கள், நிலத்தை மைதானமாக்கும் பணிகளை மேற்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த தொம்பரம்பேடு கிராம மக்கள், உடனடியாக பணிகளை தடுத்து நிறுத்தி ட்ராக்டரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை விளையாட்டு மைதானமாக மாற்றி விட்டால் தங்களது கிராமத்தில் உள்ள கால்நடைகள் மேய்ச்சலுக்கு எங்கு செல்லும்.

ஆடு, மாடுகளை மட்டுமே அதிகளவில் நம்பி வாழ்ந்து வரும் நிலையில் மேய்ச்சல் நிலத்தை மைதானமாக மாற்ற அனுமதிக்க முடியாது" எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.

போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை காவல் துறையினர், முதலில் நீங்கள் வருவாய்த்துறை அலுவலரிடம் சென்று முறையிடுங்கள். அதுவரை பணிகள் மேற்கொள்ளப்படாது என உறுதியளித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details