தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு : திருவள்ளூர் எஸ்பி அறிவுரை - திருவள்ளூர் எஸ்பி பொன்னி

திருவள்ளூர்: இரு சக்கர வாகன விபத்துகள் அதிக அளவில் நடைபெறுவதாகவும் உரிய அனுமதியின்றி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி தெரிவித்துள்ளார்.

எஸ்பி பொன்னி

By

Published : Feb 8, 2019, 12:02 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி பொன்னி சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். காவல்துறையினரின் இருசக்கர வாகன அணிவகுப்பு துவக்கி வைத்து விபத்துகளை தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தலைக்கவசங்களை வழங்கினார். மற்றும் நாடகம் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய பின் எஸ்பி பொன்னி பேசியதாவது, மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகன விபத்துகள் அதிக அளவில் நடைபெறுவதாகவும் உரிய அனுமதியின்றி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரகாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details