சென்னை அருகேயுள்ள திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தல ஒருவரின் திருமண நிகழ்வில் முன்னாள் மற்றும் தற்போது பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்: திருமண நாளில் முன்னாள் ரூட் தல கைது! - cakecut Broadsword
திருவள்ளூர்: திருமணத்தின்போது கல்லூரி புள்ளீங்கோவுடன் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய முன்னாள் 'ரூட் தல'யான மணமகனை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
![பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்: திருமண நாளில் முன்னாள் ரூட் தல கைது! மாணவர்களுடன் பட்டாகத்தியால் கேக் வெட்டி மணமகன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5870200-thumbnail-3x2-trl.jpg)
அப்பொழுது மணமக்கள் நின்ற மேடையில் ஏறிய புள்ளீங்கோ கும்பல் மண விழாவைக் கொண்டாடும்வகையில் நான்கு அடி பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினர். அது மட்டுமில்லாமல் மற்றொரு மாணவன் பட்டா கத்தியோடு நடனம் ஆடும் காணொலி தற்பொழுது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
தற்போது அந்தப் பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டிய முன்னாள் ரூட் தல மணமகனை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். கடந்த வாரத்தில் ரவுடி பினு ஸ்டைலில் சட்டக்கல்லூரி மாணவரும் அவரது நண்பர்களும் கேக் வெட்டி கொண்டாடியதற்காக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.