தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பைகளில் 30 கோடி அள்ளிய நகராட்சி ஆணையர்!

திருவள்ளூர் : திருவேற்காடு நகராட்சி ஆணையர் சித்ரா குப்பை அகற்றும் பணியில் சுமார் 30 கோடி  ரூபாய்  வரை முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

திருவேற்காடு நகராட்சி

By

Published : Apr 30, 2019, 9:06 AM IST

ஆவடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 30 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், அனைத்து நகராட்சிகளிலும் 2016 திடக்கழிவு மேலாண்மை சட்டத்தின்படி, குப்பைகளை தரம்பிரிக்க உரக்கிடங்கு, இயந்திரம், வாகனம் போன்றவற்றிற்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மூன்று கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவேற்காடு நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் விதிமுறைப்படி தரம் பிரிக்கப்பட்டு மக்காத குப்பைகளை அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டாலே திருவேற்காடு நகராட்சி, குப்பைகள் இல்லாத நகரமாக இருக்கும்.

ஆனால், திருவேற்காடு நகராட்சி ஆணையர் சித்ரா, சுகாதார ஆய்வாளர் சாமுவேல் ஆகியோர் விதிகளை மீறி செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதாவது, மத்திய அரசு ஒதுக்கும் பல கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்வதற்காக, டன் கணக்கில் குவியும் குப்பைகளை இரவு நேரங்களில், யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அயனம்பாக்கத்தில் உள்ள காலி நிலத்தில் பூமிக்கு அடியில் கொட்டி அதன் மீது மண்ணை போட்டு புதைத்துவருகின்றனர். இதுவரை அங்கு ஆயிரக்கணக்கான டன் குப்பைகள் புதைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

thiruverkadu

மேலும், நகராட்சி ஆணையர் சித்ரா பூவிருந்தவல்லி நகராட்சியில் இருந்தபோது குப்பை அகற்றுவதில் 30 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்தது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எனவே, நகராட்சி ஆணையரின் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details