தமிழ்நாட்டில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற ஆலயங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவேற்காடு தேவி கருமாரியம்மன் ஆலயமும் ஒன்று. உலக ஜீவராசிகளின் பஞ்சத்தைப் போக்க அம்மன், தன் சரீரத்தில் அனைத்து விதமான காய்,கனி,தானியங்களை உற்பத்தி செய்து மக்களுக்குத் தந்தாள் என்பது ஐதீகம்.
இதனை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு புரட்டாசி மாதமும் பௌர்ணமி நாளன்று திருவேற்காடு தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் நிறைமணி உற்சவ வைபவம் நடைபெறும். அந்த வகையில் இன்று நடைபெற்ற நிறைமணி உற்சவத்தில் அம்மன் இரண்டு டன் காய், கனி, தானியங்கள் மற்றும் இனிப்புகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்குக் காட்சி அளித்து வருகிறார்.