சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் அருகே திருமலைவாசன் நகரிலுள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிணி. இவர் சென்னை தியாகராய நகரிலுள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரும், இவரது கணவர் வெங்கடேசனும் நேற்று காலை வழக்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் சென்றுள்ளனர்.
பின்னர் வேலை முடித்துவிட்டு இருவரும் இரவு வீடு திரும்பியுள்ளனர். பூட்டிய வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது,
வீட்டின் அலமாரியில் இருந்த 20 சவரன் தங்கநகை மட்டும் காணமால் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.