திருவள்ளூர் மாவட்டம் தலக்காஞ்சேரி ஊராட்சியில் இளைஞர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் இணைந்து குற்ற சம்பவங்களை குறைப்பதற்காகவும், குற்றச் சம்பவங்கள் நடந்தால் அதனை எளிதில் கண்டறியும் நோக்கத்திலும் கிராமத்தைச் சுற்றி 20 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.
இளைஞர்கள் ஒன்றிணைந்து பொருத்திய கண்காணிப்பு கேமரா - thiruvallur youngsters fit surveillance camera in village
திருவள்ளூர்: தலக்காஞ்சேரி ஊராட்சியில் குற்றச்சம்பவங்களை குறைக்கும் வகையில் இளைஞர்கள் ஒன்றிணைந்து பொருத்திய கண்காணிப்பு கேமரா இயக்கத்தை திருவள்ளூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.
![இளைஞர்கள் ஒன்றிணைந்து பொருத்திய கண்காணிப்பு கேமரா இளைஞர்கள் ஒன்றிணைந்து பொருத்திய கண்காணிப்பு கேமரா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12085174-thumbnail-3x2-dark.jpg)
இளைஞர்கள் ஒன்றிணைந்து பொருத்திய கண்காணிப்பு கேமரா
அதன் இயக்கத்தை திருவள்ளூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தலக்காஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் பாபு துணைத்தலைவர் விஜயன், கிராம இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:1 லட்சம் ரூபாய் நிதியை தூய்மைப் பணியாளர்களிடம் கொடுத்து வழங்கிய நாளைய பாரதம் குழு!