திருவள்ளூர் மாவட்டத்திற்குள்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டார். இதில், ஆண் வாக்காளர்கள் 16 லட்சத்து 80 ஆயிரத்து 869 பேர், பெண் வாக்காளர்கள் 17 லட்சத்து 10 ஆயிரத்து 287 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 746 பேர் என மொத்தம் 16 லட்சத்து 80 ஆயிரத்து 869 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த 2020க்கான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 29 ஆயிரத்து 418 பேர் அதிகமாக உள்ளனர் என்றார்.