தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருவேறு இடங்களில் ஒரே நாளில் கொள்ளையர்கள் கைவரிசை ; பொதுமக்கள் அதிர்ச்சி! - திருவள்ளூர்

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே இருவேறு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து 90 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் 65 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கொள்ளை

By

Published : Apr 20, 2019, 3:12 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள இராமச்சந்திரா நகர் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் வசிப்பவர் கமல். அப்பகுதியில் நகைக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். கமல் கடந்த மகாவீர் ஜெயந்தி அன்று குடும்பத்துடன் திருப்பதி சென்று இருந்தார். பூட்டிக்கிடந்த வீட்டை நோட்டமிட்ட மர்மநபர்கள், இரும்பு கடப்பாரையால் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 70 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி மற்றும் 15 ஆயிரம் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

திருப்பதி சென்றுவிட்டு திரும்பி வந்த கமலின் குடும்பத்தார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்ததில் நகை-பணம் மாயமானது தெரிய வந்ததையடுத்து, மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details