திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அமிர்தம். பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஊராட்சி செயலாளர் சசிகுமார், முன்னாள் தலைவர் ஹரிதாஸ், துணை தலைவர் ரேவதியின் கணவர் விஜயகுமார் ஆகியோர் அவரை அரசுப் பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றவிடவில்லை. இதுகுறித்த செய்தி ஈடிவி பாரத்தில் வெளியானது.
இதனையடுத்து, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டியலின ஊராட்சி தலைவர் தேசிய கொடி ஏற்ற மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எஸ்பியிடம் உத்தரவிட்டதன் பேரில் விஜயகுமார் மற்றும் வார்டு உறுப்பினர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.