தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தரம் உயர்த்தப்பட்ட அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை! - student boycott

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை எனக்கூறி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

student protest

By

Published : Jun 19, 2019, 8:11 AM IST


ஊத்துக்கோட்டை அடுத்த சேர்வாய் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், இது குறித்து ஆட்சியர் முதல் தலைமைச் செயலகம் வரை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, அப்பள்ளி மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள்

உரிய நடவடிக்கை எடுத்து ஆசிரியர்கள் நியமிக்காவிட்டால் அடுத்தகட்டமாக, பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details